Skip to main content

Posts

Showing posts from November, 2019

லெமன் டீ Lemon Tea

'லெமன் டீ' விடுமுறை நாளிலும்  கடமை தவறாமல், காலையில் இருந்து  மாலை வரை,  தன் வேலையை முடித்து வீடு திரும்பும் சூரியனின் சோம்பலும் , தனது ஓய்வை முடித்துவிட்டு, இரவு வேலையை   தொடங்கும்  சந்திரனின் வேதனையும் , ரசிக்கும்படி  அழகாக தெரிகிறது. ஆசையாக அம்மா போட்டு தந்த  "Lemon Tea" யை    பருகும்போது !!! ந . விக்னேஷ்

Happy Mother's Day

Happy Mother's Day எப்போதும் போல  ஒரு  ஸ்டேட்டஸ்  ஆனால் இன்று மட்டும்  அம்மாவுக்கு 😏 Android   phone  இல்லாத அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் , ஸ்டேட்டஸ் பார்க்காமல்  பழக கற்று கொடுத்த அம்மாவுக்கு W hatsapp ல் Status எதற்கு ???                                         ~ ந . விக்னேஷ்

அம்மா

' அம்மா ' நான் கூறிய முதல் கவிதை 'அம்மா  ' நான் தந்த வலிகளையும் சுகமாக ரசித்த 'என் அம்மா ' உன் பாசத்தால் அன்னையர் தினமும் மறந்து போகுமே 'அம்மா' அம்மாவை பற்றி   ஆயிரம் கவிதைகள் வந்தாலும் என்றும் புது கவிதை   'என் அம்மா' ( The Only Girl with Never Break up ) ந . விக்னேஷ்

குப்பை

"குப்பை" இவன் சேகரிக்கும் குப்பைகளில் இவனது ஆசைகளும் ,  கனவுகளும் சிதரிக்கொண்டுதான் இருக்கின்றன , இது போன்ற சிறுவர்கள்  சினிமாக்களில் மட்டுமே Slumdog Millionaire ஆகிறார்கள் ,  நிஜ வாழ்க்கையில்   உணவுக்காக  போராடிகொண்டுதான் இருக்கிறார்கள் , இதற்கு ஏதோ ஒருவகையில்  நாமும் காரணமாக இருக்கின்றோம் தண்டனை இல்லாத குற்றவாளியாக !!!!! ( குப்பைகளை குப்பை தொட்டியில் போடவும் )                                                                ந . விக்னேஷ்

ஒரு துளி கண்ணீர்

ஒரு துளி கண்ணீர் தீராக் காதல் , ஆராத வலிகள் , அழியாத சோகங்கள் , கணக்கில்லா   ஏமாற்றங்கள் , தனிமையான பயணங்கள் , காணல் நீரான நட்புகள் , இவை அனைத்தையும்  ஒரு துளி கண்ணீராக மாற்றி   துடைத்து செல்கிறேன்  ஏதோ,   ஒரு மூலையில்  ஒளிந்து கொண்டிருக்கும்  தன்னம்பிக்கையின் உதவியோடு ....                                                                                                                 ந . விக்னேஷ்

ஓர் ஊர்

ஓர் ஊர் ஊர் கண்ணுபட போகுதென்று, அரசாங்கமே வைத்துவிட்டது.... அவள் விரலில் மை!!!!!! பொறாமையில் பொங்கின  மை படாத விரல்கள்........                                                                                         ந.விக்னேஷ்                              

வெளிநாடு சென்று வேலை பார்ப்பவர்களுக்கு சமர்ப்பணம்!!

வெளிநாடு வாழ்க்கை கவிதை தொலைதூர பயணத்திற்கு  பல வருட காத்திருப்பு  இன்றோடு முடிகிறது, பிரிவு என்ற சூழலும்  நமக்காக இணைந்தது, கைப்பேசி உரையாடலில்  தனிமையும்  மறந்து போகிறது, மேகத்தின் மேல் ஆகாய பயணத்திலும்  உந்தன் நினைவுகள்  நெஞ்சோடு பயணம் செய்கிறது, உன் சிறிய சிரிப்புகள்  கண்மூடும் வேளையிலும்  கண் எதிரே தோன்றி  எனை சிரிக்க செய்கிறது, தனிமையில்.!!!!   தனிமையில்.!!!!                   தனிமையில்.!!!!                                                                      ~ந. விக்னேஷ்